அதிகரித்து வரும் வாழக்கைச் செலவும் மற்றும் ஊதிய உயர்வை வலியுறுத்தி பிரித்தானியா முழுவதும் உள்ளி முக்கிய நகரங்களில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லண்டன், எடின்பர்க், ஸ்வான்சீ மற்றும் லிவர்பூல் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். இதன்படி, லண்டன் பேரணியில் சுமார் 10,000 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையினரும் போராட்டம்
இந்த பேரணியில் காலநிலை மாற்றம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியா முழுவதும் ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் தேசிய சங்கம் (RMT) ஒருங்கிணைத்த வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 மற்றும் அக்டோபர் 8ம் திகதிகளில் திட்டமிடப்பட்ட வகையில் வேலைறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்துத் தொழிலாளர்களின் தேசிய சங்கம் அறிவித்திருந்தது.
அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி குறைப்பு
இதன்படி, நாடு முழுவதும் உள்ள 40,000 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தொழிற்சங்கம் அதன் இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸின் அரசாங்கத்தின் சமீபத்திய பாதீட்டு திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்புகள் வந்துள்ளன.
குறித்த வரவு செலவுத் திட்டம் மூலம் ஆற்றல் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கான வரிகளைக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அதிகரித்து வரும் வாழக்கைச் செலவும் மற்றும் ஊதிய உயர்வை வலியுறுத்தி பிரித்தானியா முழுவதும் உள்ளி முக்கிய நகரங்களில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.