அங்கிகாரம் பெற்ற மற்றும் சுயாதீனமான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்..!
ஊடகவியலாளர் லின்ரன் அறிக்கை
இலங்கையில் ஊடகவியலாளர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் அதாவது அங்கீகாரம் பெற்ற மற்றும் சுயாதனமான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் இதற்கு அரசாங்கம் உடனடியாக இல்லையெனில் படிமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜனநாயக நாட்டின் நான்காவது பெரிய தூனாக காணப்படும் ஊடக நிறுவனங்கள் அதில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னிச்சையாக இயங்கும் சுயாதீனமான ஊடகவியலாளர்கள் தமது ஆவணப்படுத்தல் மற்றும் செய்தி சேகரிப்பு தொடர்பாக பல சவால்கள் மற்றும் அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது
ஆனாலும் எதாவது ஒரு பிரச்சினை என்றால் முதலில் அவ்விடத்தில் பிரச்சினை தரப்பிற்கு ஒரு பலமாகவும் பொருப்பு கூறல் என்பதற்காக ஊடகவியலாளர் செல்கின்றனர் ஆனாலும் தற்போது காணப்படும் நிலையில் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தரப்பில் மற்றும் உண்மை தகவலை சேகரித்து ஊடகங்கள் வாயிலாக பகிரங்க படுத்தும் போது எதிர் தரப்பால் காவல்துறையில் மற்றும் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் புதிய கலாச்சாரம் பல பகுதிகளில் முளை விட்டு வருகிறது
அது மட்டுமல்லாமல் இலங்கை நாட்டின் ஊடகவியலாளர் தமது அன்றாட வாழ்வில் பல ஒடுக்கு முறைகளுக்கு இடையே தமது பணியை மேற்கொண்டு வருகின்றனர்
அதாவது அரசியல் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு சூழல் தொடர்பாக பார்க்க போனால் இலங்கையின் ஒரு சராசரி குடிமகன் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விட பல மடங்கு பிரச்சனைகளை அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் பொறுப்பு கூறல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் பிரச்சினை களை எதிர்நோக்கி வருகின்றனர்
அடிப்படையில் நீண்ட காலமாக அரசியல் மிரட்டல்கள் ஊடகவியலாளர்களின் தொடர் விசாரணைகள் மற்றும் புலனாய்வுத் துறையினரின் பின் தொடரும் தன்மை என்பவன ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாகின்றது
சுதந்திரமான எழுத்துக்கு இருக்கும் தனித்துவமான தன்மைகளும் பொறுப்புக் கூறலும் இதன் அடிப்படையில் ஒரு அழுத்தத்தின் விளைவாகவே காலத்தின் கட்டாயமாக இலங்கை திருநாட்டில் வெளியிடக்கூடியவாறு உள்ளது இதனால் பல துணித்தலான மற்றும் சுயாதீனமான ஊடகவியலாளர்கள் தமது பொறுப்புக் கூரல்களுக்காக தமது பணியினை முழுமையாகவோ தற்காலியமாகவோ விட்டு விட்டு செல்கின்றனர்
மற்றும் உள்நாட்டு போர் நிறுத்தப்பட்ட பின்பும் அரசியல் கட்சிகள் அரசியல்வாதிகள் போலி முகவர்கள் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை நடுநிலையில் விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மீதும் ஊடகச் சுரண்டல்கள் மற்றும் மன ரீதியான அழுத்தங்கள் பாகுபாடு தன்மை என்பவனை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கான ஊடக கட்டுப்பாடு இன்றி மறைமுக விம்பத்தில் அரசாங்கம் அரசியல் வாதிகள் ஊடகத்தினை கட்டுப்படுத்துகின்றனர் இதற்கு அவர்கள எடுக்கும் ஆயுதமாக மான நட்ச வழக்கு சமூகப் பரப்பு கைதுகள் மற்றும் தொலைத் தொடர்பு மிரட்டல்கள் ஆயுதமுனை மிரட்டல்கள் வாள் வெட்டு என்பவற்றைத் தொடர்ந்து ஊடக சுதந்திரத்தை தமது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகின்றனர்
இதனை விட செய்தி சுதந்திரம் என பார்க்கப் போனால் இலங்கையில்செய்தி சுதந்திர வரிசையில் கடைசி வரிசையிலே இலங்கை ஊடக சுதந்திரம் காணப்படுகிறது இதனை நாம் இலகுவாக கூறப்போனால் தணிக்கை மற்றும் சுய தணிக்கை பிரச்சனைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன இதனால் ஊடகத்தில் ஊடகவியலாளர்கள் தமது சுதந்திரத்தை முற்றாக இழக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது
இலங்கை திருநாட்டை பொருத்தவரை வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் ஒப்பிட்டவரை அதிகளவான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் அதாவது அவர்களின் எழுத்துக்களில் தமிழ்த் தேசியக் கொள்கைகள் மேலோங்கி நிற்கும் எனப்படும் அரசாங்கத்தின் போலி கண்ணோட்டமும் அதனை விட வடக்கு கிழக்கில் உண்மையில் நடந்த விடயங்களை வெளியில் கொண்டு செல்ல விரும்பிய ஊடகவியலாளர்கள் தொடர்விசாரணைக்கு அழுத்தப்படுவதும் ஒரு தேசிய ஊடகவியலாளர் என முத்திரை குத்தப்படுவதும் ஒரு போலி கண்ணோட்டமாகவே உள்ளது இலகுவாக அவர்களின் தொலைத் தொடர்புகள் பின்தொடரப்படுவதும் அவர்கள் முற்று முழுவதாக புலனாய்வுத் துறையினரால் மட்டுமன்றி காவல்துறை என்பவர்களால் கண்காணிக்கப்படுவதும் தொடர்ச்சியாக காணப்படுகிறது
தேசிய இருப்பைக் கருதி ஊடகவியலாளர்களின் எழுத்துக்கள் நடுநிலையில் காணப்படுவதாக மட்டுமின்றி வடக்கு கிழக்கில் காணப்படும் அதாவது தற்போது மேலோங்கி நிற்கும் மனித உரிமை மீறல்கள் நிலச்சுரண்டல்கள் பௌத்த மயமாக்கல் போன்றவற்றை ஆவணப்படுத்தும் போது திட்டமிட்டு சில ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதையும் மிரட்டப்படுவதையும் கண் மூலமாக காணக்கூடியதாக உள்ளது
இதனை கடந்த அரசாங்கம் மற்றும் தற்போது அரசாங்கம் பார்த்தும் பார்க்காமலும் இருப்பது இலங்கையில் ஊடக சுகந்திரம் இருப்பதா இல்லையா போலியாக இருக்கின்றது என வெளிநாடுகளுக்கு தெளிவுபடுத்துகிறதா என யோசிக்க வைக்கிறது ஜனநாயகத்தின் நான்காவது மிகப் பெரிய தூணாக கூறப்படும் ஊடகங்கள் அடக்கு முறையிலும் கட்டுப்பாட்டுக்குளும் கொண்டு வருவது இந்நாட்டின் ஜனநாயகத்தை கேள்வி கேட்க வைக்கிறது
நாம் ஊடகவியளார்களின் ஆதரவை பார்க்க போனால் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது அதாவது கட்டமைப்பு ரீதியாகவோ அடையாள அட்டை ரீதியாகவோ மட்டுப்படுத்தப்பட்ட ஊடக சுதந்திரம் மட்டுமே காணப்படுகிறது இதனை இலகுவாக அரசாங்கம் தமது கையால்கைக்குள் கொண்டுவர முயற்சிப்பதாகவும் இல்லையெனில் போலி ஊடகவியலாளர்களை உருவாக்குவதாகவும் சில கருத்து உருவாககங்கள் உள்ளன
அதனை விட இதுவரை தாக்கப்பட்ட மிரட்டப்பட்ட கொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களின் விசாரணைகள் முற்றுமுழுவதாகவும்கண்காணிக்கப்பட்டதா அரசாங்கத்தால் என்பது கேள்விக்குறிய விடயமாகும் அதனை விட ஊடகவியலாளர்களின் விசாரணைகள் முடிவுக்கு வந்ததா இல்லை அவர்களுக்கான தாக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைத்ததா என்பன கேள்வியாகவே பல சதாப்தங்களாகவே தொடர்ந்த வண்ணம் உள்ளன
தற்பொழுது சுதந்திரம் ஓரளவு உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் சுயாதீனமான ஊடகவியலாளர்கள் தமது செய்திகளை பரப்புவதால் அடையாளப்படுத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உண்மைகளை நேருக்கு நேர் கூறுகின்ற ஊடகவியலாளர்களின் செய்திகளும் போலி ஊடகையாளர்களால் ஒரு சந்தேக நோக்குடனே மக்கள் மத்தியில் பார்க்கப்படுகின்றன
இதனையே முதல் முதலில் அரசாங்கம் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் அதனை விட அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான சுகந்திரம் எதிர்வரும் காலத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் அதனை உடனடியாக செய்யப்படவில்லை என்றாலும் படிமுறையில் ஊடக சங்கங்களை நிறுவி அதன் மூலம் கொண்டுவர வேண்டும் சுயாதீனமான இயங்கும் ஊடகவியலாளர்களுக்கு தனிக்கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் இதனை அரசாங்கம் மற்றும் ஆலுத்தரப்பினர் சட்டமூலம் ஆக்க வேண்டும்

