திருக்கோவில் பிரதேசத்தில் விவசாய கண்காட்சியும் விற்பனை நிலையமும்..!

திருக்கோவில் பிரதேசத்தில் விவசாய கண்காட்சியும் விற்பனை நிலையமும்..!

நாளை(14/09/2025) திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளான தாண்டியடி விக்னேஷ்வரா வித்தியாலயத்திலும் தம்பிலுவில் மத்திய சந்தையிலும் இரண்டு பிரதான நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.

அவையாவன திருக்கோவில் சந்தையில் விவசாய உற்பத்திகளுக்கான கண்காட்சிகளும் புதிய விதைகளும் அறிமுகப்படுத்தி விற்பனை நிலையமும் திறந்து வைக்கப்படுகின்றன.

விவசாயிகள் குறைந்தளவு விலையில் விதைகளை பெறவேண்டிய நிலை ஏற்பட்டாலும் அம்பாரைக்கு சென்று வர வேண்டி ஏற்படுகின்றது இதனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் இவற்றினை மத்திய சந்தையில் பெற்று கொள்ளமுடியும் என்பதனை தெரிவித்து அடுத்ததாக மிக பெரிய வைத்திய முகாம் ஒன்றினை கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சினால் தாண்டியடி விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் நடைபெற உள்ளன.

இவ் வைத்திய முகாமிற்கு சுமார் 2000பேர் வருகை தர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றவை பிரதான விடையமாக கொள்ளப்படுகின்றது.

இவ் வைத்திய முகாமிற்கு வருகை தருகின்ற நோயாளர்களிற்கு காலை உணவு வழங்கப்படும் என்பதனையும் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் அறியப்படுத்தினார்.

Recommended For You

About the Author: admin