இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண்கள் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக (DIG) நியமிக்கப்படவுள்ளனர்.
2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த நியமனங்களுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இறுதி ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள DIG-க்கள் தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷாணி செனவிரத்ன ஆவர். இவர்களில் மூவர் 1997 ஆம் ஆண்டு ஒரு வருட தகுதிகாண் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

