நீண்ட நாட்களாக உணவு கிடைக்கவில்லை என கூறி தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாதம்பே பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இரண்டரை மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் அவர் பொலிஸ் நிலையம் சென்றதாக கூறப்படுகின்றது.
கணவர் கவனிப்பதில்லை
கடற்றொழில் செய்து வரும் தனது கணவர் தன்னையும் பிள்ளைகளையும் கவனிப்பதில்லை எனவும் பிள்ளைகளுடன் அடிக்கடி பட்டினி கிடப்பதாகவும் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் நூறு ரூபாய்க்கு வாங்கிய வாழைப்பழங்கள் தான் கடைசியாக சாப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அங்கு அவர்களுக்கு மதிய உணவும், உலர் உணவும் வழங்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்துள்ளார்.
அத்துடன் பெண்ணின் கணவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களை நல்ல முறையில் நடத்துங்கள் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல குடும்பங்கள் பட்டினியில் வாடுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது