காங்கேசன் துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரின் அதிரடி.!
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்லாகம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக வீட்டு வேலை பணிக்காக சென்ற 23 வயதுடைய பெண் 25 பவுன் (78 லட்சம் பெறுமதி உடைய) தங்க நகைகளை களவாடிய சந்தேகத்தின் பேரிலும் அதனை விற்பனை செய்வதற்கு உதவிய அவரது கணவரும் பிற நபர் ஒருவரும் காங்கேசன்துறை பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினரால் இன்று (2025.09.02)கைது செய்யப்பட்டுள்ளானர்.
கைது செய்யப்பட்டவர்களையும் சான்று பொருட்களையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


