சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய பேரவை மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் முழுமையான அதரவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று யாழ்ப்பாணம் வைத்து குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

