சாந்த முதுங்கொடுவ கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

சாந்த முதுங்கொடுவ கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவை சுட்டுக் கொன்றவர் குற்றப் புலனாய்வுத் துறையின் விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சம்பவம் குறித்து, கடந்த அக்டோபர் 1ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில் 46 வயதான சாந்த முதுங்கொடுவ சுடப்பட்டார்.

 

சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்ற பொலிஸார், தலகமவில் உள்ள பலாந்துணை சந்திப்பில் அவசரகால போக்குவரத்துச் சோதனைச் சாவடி அமைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வந்த காரையும் அதன் சாரதியையும் கைது செய்தனர்.

 

துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 9mm ரக துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin