மீண்டும் மக்கள் புரட்சி ஒன்று ஏற்ப்படும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாத இறுதியின் பின்னர் நாட்டுக்குள் மிகப் பெரிய மக்கள் புரட்சி ஆரம்பமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தலங்கமை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலை மாணவர்களின் போஷாக்கு வேலைத்திட்டம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விதியில் இறங்க போவது மிகவும் வறிய மக்கள்

அக்டோபர் மாதத்திற்கு பின்னர் சுனாமியை போன்று மிகப் பெரிய மக்கள் புரட்சி நாட்டுக்குள் ஏற்படும். அதனை எந்த வர்த்தமானி அறிவித்தல் மூலமும் நிறுத்த முடியாது. அக்டோபர் மாதத்திற்கு பின்னர் வீதியில் இறங்க போவது மிகவும் வறிய மனிதர்கள்.

இரண்டில் ஒன்றை பார்க்கவே அவர்கள் வீதியில் இறங்குவார்கள். வீட்டில் இருக்கும் அப்பாவி பிள்ளை பசியால் அழும் போது, தந்தையால் சும்மா இருந்து விட முடியாது. அப்போது அந்த தந்தை இரண்டில் ஒன்றை பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வெளியில் இறங்குவார்.

முழு அரசியல் முறைமையும் மாறும்

அப்படி வெளியில் வரும் மக்களுடன் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு எதனை செய்தாலும் ரணில் ராஜபக்சவினால், மோத முடியாது. முழு அரசியல் முறைமையும் மாறும். ஆளும், எதிர்க்கட்சி என அனைவருக்கும் நாடு முற்றாக அடுத்த பக்கத்தை நோக்கி மாறும் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor