நீரில் மூழ்கிய மருமக்களை காப்பாற்றி விட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த மாமா..!

நீரில் மூழ்கிய மருமக்களை காப்பாற்றி விட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த மாமா..!

வேல்ஸ் நாட்டிலுள்ள தன் சகோதரியின் மகள்களைக் காப்பாற்றுவதற்காக அருவி ஒன்றிற்குள் குதித்த இலங்கைத் தமிழர் ஒருவர், பிள்ளைகளை மீட்டுக் கரை சேர்த்த நிலையில், தான் தண்ணீருக்குள் சிக்கிக்கொண்டார். மறுநாள் அவரது உயிரற்ற உடலைத்தான் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கமுடிந்துள்ளது.

Swanseaயில் வாழ்ந்துவந்த மோகன் என்னும் மோகன நீதன் முருகானந்தராஜா (27), தன் உறவினர்களுடன் Brecon Beacons என்னுமிடத்துக்குச் சென்றுள்ளார். அவரது குடும்பத்தினர் பலர் அங்குள்ள அருவியில் விளையாடிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் அவரது சகோதரி மகள்கள் இருவர் தண்ணீரில் தத்தளிக்கத் துவங்க, அவர்களைக் காப்பாற்ற தண்ணீருக்குள் இறங்கியுள்ளார் மோகன்.

தன் சகோதரி மகள்கள் இருவரையும் தண்ணீரில் தத்தளித்த மற்ற உறவினர்களையும் மீட்டு கரை சேர்த்த மோகன், தானே தண்ணீரில் சிக்கிக்கொண்டுள்ளார்.

மாயமான மோகனை மீட்கும் முயற்சி அன்று தோல்வியில் முடிய, மறுநாள் அவரது உயிரற்ற உடலைத்தான் மீட்டிருக்கிறார்கள் மீட்புக் குழுவினர். குடும்பத்தினரை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவந்த அதிகாரிகள், தற்போது மோகனின் மரணம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.

Recommended For You

About the Author: admin