முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகெட்டென்ன விளக்கமறியலில்

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகெட்டென்ன விளக்கமறியலில்

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும் ஓய்வுபெற்ற அட்மிரலுமான நிஷாந்த உலுகெட்டென்ன, இன்று (ஜூலை 28) கைது செய்யப்பட்டு, ஜூலை 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட நிஷாந்த உலுகெட்டென்ன, பின்னர் பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக அவர் கடமையாற்றிய காலத்தில், பொத்துஹெர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அட்மிரல் நிஷாந்த உலுகெட்டென்ன, ஜூலை 2020 முதல் டிசம்பர் 2022 வரை இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாகப் பதவி வகித்தார்.

Recommended For You

About the Author: admin