மாத்தளை ஹினுக்கல சரணாலயத்தில் கர்ப்பிணி மான் சுட்டுக்கொலை
மாத்தளை, ஹினுக்கல சரணாலயத்தில் இன்று அதிகாலை கர்ப்பிணி மான் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக, இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் சகோதரர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

