வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவருக்கும் விசேட அறிவிப்பு!
இணையம் வழியாக வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மோசடி செய்யும் குழுக்களின் புதிய இலக்காக சுற்றுலாப் பகுதிகளில் உள்ள விடுதிகள் மாறி உள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுற்றுலா விடுதிகளை முன்பதிவு செய்ய உதவும் பிரபலமான இணையதளங்கள் மூலம் இந்த மோசடி கும்பல் விடுதிகளை தொடர்பு கொள்கிறது. அவர்கள் விடுதிகளின் கணக்குகளில் பணம் செலுத்திவிட்டதாகக் கூறி, அந்த விடுதிகளின் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் போனுக்கு வங்கி அனுப்பும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஓ.டி.பி (OTP) எண்ணைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இதன் மூலம், அந்த விடுதிகளின் கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடியாளர்கள் கொள்ளையடிப்பதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் இணையவழி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற பல புகார்கள் தங்களுக்கு வந்துள்ளதாகவும், எனவே எந்தவொரு சூழ்நிலையிலும் வெளியாட்கள் யாருக்கும் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓ.டி.பி எண்ணைக் கொடுக்க வேண்டாம் என்றும் அந்தப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

