219 மருந்தகங்களின் உரிமங்கள் இடைநிறுத்தம்: சுகாதார அமைச்சர் தகவல்
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA), ஜூலை 18, 2025 நிலவரப்படி, 219 மருந்தகங்களின் உரிமங்களை இடைநிறுத்தம் செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இடைநிறுத்தப்பட்டவற்றில், 137 மருந்தகங்கள் நிரந்தர மருந்தாளுநர் இல்லாத காரணத்தினாலும், 82 மருந்தகங்கள் சமூக மருந்தக நடைமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதாலும் உரிமங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

