முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பிணையில் விடுதலை: அரசியல் உள்நோக்கம் குற்றச்சாட்டு
ஹவ்லோக் டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, கடந்த ஜூலை 14ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையிலிருந்து விடுதலையான பின்னர் தனது ஆதரவாளர்களை முதல் முறையாக சந்தித்த துமிந்த திஸாநாயக்கவுக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு கூடியிருந்தவர்களிடம் உரையாற்றிய துமிந்த திஸாநாயக்க, அண்மைக் காலத்தில் பல அரசியல்வாதிகளைச் சிறையில் அடைப்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வந்துள்ளது என்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டார்.

