யாழ்ப்பாண யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

யாழ்ப்பாண யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது: போலி ஆவணங்களுடன் இத்தாலி செல்ல முயற்சி

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (ஜூலை 18) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

அதிகாரிகளின் கூற்றுப்படி, சந்தேகநபர் போலி கடவுச்சீட்டு, போலி விமான அனுமதி அட்டை (boarding pass) மற்றும் போலி குடிவரவு முத்திரைகளுடன் பிடிபட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட இந்த யுவதி, குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி டுபாய் வழியாக இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

போலித் தகவல்களை வழங்கியமை, உத்தியோகபூர்வ ஆவணங்களைத் திரிபுபடுத்தியமை, மற்றும் போலியான வீசாவுடன் சட்டவிரோத வெளிநாட்டுப் பயணத்திற்கு முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Recommended For You

About the Author: admin