சந்தையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை: அமைச்சரவைப் பத்திரம் தாக்கல்
சந்தையில் பொதி செய்யப்படாத (லூஸ்) தேங்காய் எண்ணெய் விற்பனையை நிறுத்துவதற்கு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி சபையின் தலைவர் சாந்த ரணவக்க நேற்று (ஜூலை 13, 2025) தெரிவித்தார்.
தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் சந்தையில் பல்வேறு வகையான எண்ணெய்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த எண்ணெய்களை உட்கொள்வதன் மூலம் தொற்றாத நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்று பலர் கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நுகர்வோரின் ஆரோக்கிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

