இன்று போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் திரு.வி.மதிமேனன் அவர்கள் தும்பங்கேணி நீர் வழங்கல் அலுவலகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டார்.
குறித்த கள விஜயத்தின் போது தும்பங்கேணி நீர்வழங்கல் அலுவலகத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக கௌரவ தவிசாளர் ஆராய்ந்தார். அதன்போது
“வரட்சியான காலங்களில் தேசிய நீர்வழங்கள் திட்டத்தினால் வருகின்ற நீர் குறைவாக உள்ளமையினால் சில கிராமங்களுக்கு தொடர்ச்சியாக நீர் தடைப்படுகின்றன.” என அறிந்து கொண்ட அவர் மட்டக்களப்பு மாவட்ட தேசிய நீர்வழங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி தொடர்ச்சியாக தடையின்றி நீரினை பெற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் தும்பங்கேணி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் திக்கோடை,சுரவணையடியூற்று,இளைஞர் விவசாயத்திட்டம்,தும்பங்கேணி,திக்கோடை 50வீட்டுத்திட்டம், 39ஆம் கிராமம் (செல்வாபுரம்) ,40ஆம் கிராமம் (வம்மியடியூற்று) ஆகிய கிராமங்களுக்கு போரதீவுப்பற்று பிரதேசசபையினால் சுத்தமான குழாய் நீர் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


