பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தல் தொடர்பான செயலமர்வு..!
பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தல் செயலமர்வு உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.06.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் முற்பகல் 9.00 தொடக்கம் 2.00 மணி வரை நடைபெற்றது
இச் செயலமர்வின் இறுதியில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு 2024 ஆண்டு பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களின் மதிப்பீட்டில் பங்கு பற்றிய பாடசாலைகளுக்கான சான்றிதழ்களை பாடசாலை அதிபர்களுக்கு வழங்கி வைத்தார்.
இதில் யாழ்ப்பாணம் வலயத்தில் 21 பாடசாலைகளும், வடமராட்சி வலயத்தில் 10 பாடசாலைகளும், தென்மராட்சி வலயத்தில் 16 பாடசாலைகளும், தீவக வலயத்தில் 06 பாடசாலை களுமாக மொத்தமாக 53 பாடசாலைகளுக்கு சான்றிதழ்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.
இச் செயலமர்வில் பாடசாலையில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்களை அடையாளம் காணுதல் மற்றும் கையாளுதல் தொடர்பாகவும், பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வேலைப்படுத்துவதில் பாடசாலை அதிபர்களின் பொறுப்புகள் கடமைகளை தெளிவுபடுத்தல் தொடர்பாகவும் வளவாளர்களால் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் சட்ட வைத்திய நிபுணர் கே.வாசுதேவா, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணைப்பாளர் திரு. இ. செந்தூரன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


