ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளைகளால் இஸ்ரேலின் வெய்ஸ்மேன் அறிவியல் கல்வி நிறுவனம் (Weizmann Institute of Science) கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல், நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற துறைகளில் பல தசாப்தங்களாக ஆராய்ச்சிகளையும் கொண்டிருந்த வைப்பகங்கள் இங்கே இருந்ததாக கூறுகிறது.
சர்வதேச விஞ்ஞானிகள் பேரழிவிற்குள்ளான நிறுவனம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் பிரபலமான வெய்ஸ்மேன் அறிவியல் கல்வி நிறுவனம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் கடந்த 19ம் திகதி சிக்கியுள்ளது.
உயிர் அறிவியலில் அதிநவீன ஆராய்ச்சிக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனம், 45 க்கும் மேற்பட்ட ஆய்வகங்களையும் பல தசாப்தங்கள் முன்னெடுக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத ஆராய்ச்சியையும் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
நாடுகளுக்கிடையிலான போர் அழிவுகளை தாண்டி, கலாச்சாரம் மற்றும் அறிவியல் அடிப்படையில் இது போரின் மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதிலுமிருந்து விஞ்ஞானிகள் உடைந்த கல்வி நிறுவனத்துக்கு உதவ ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில், மனித இனத்துக்கு அவசியமான நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள், புற்றுநோய் மற்றும் வயது வந்தோர் இதய நோய்களைப் பற்றி ஆய்வு செய்து காக்கப்பட்டு வந்த விஞ்ஞான ஆய்வு ஆதாரங்களே அழிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதில் பல விஞ்ஞான ஆதாரங்கள் பல ஆண்டுகால அரிதான ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டு காக்கப்பட்டு வந்ததாகவும் இவை மீளப்பெற முடியாத பெறுமதியானவை எனவும் இந்த கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளில் சர்வதேச மாணவர்கள், மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளும் இணைந்து பங்காற்றியதாக சொல்லப்படுகிறது.
இந்த அழிவு $50 மில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


