கொழும்பு பங்குச்சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக வீழ்ச்சி: ரூ. 3.3 பில்லியன் வர்த்தகம்!

கொழும்பு பங்குச்சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக வீழ்ச்சி: ரூ. 3.3 பில்லியன் வர்த்தகம்!

கொழும்புப் பங்குச் சந்தை (CSE) இன்று (ஜூன் 19) தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச்சுட்டி (ASPI) 253.23 புள்ளிகள் (1.48%) குறைந்து 16,818.21 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தின் போது ரூ. 3.3 பில்லியன் பெறுமதியான பங்குகள் கைமாறின.

பங்குச்சந்தையின் தொடர்ச்சியான இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும் தற்போது சர்வதேச ரீதியாக இடம் பெற்று வரும் யுத்தங்களும் பொருளாதார நிச்சயமற்ற நிலையும் முதலீட்டாளர்களை கவலை அடையச் செய்துள்ளதாக கருதப்படுகிறது.

நேற்று (ஜூன் 18) ASPI 210.51 புள்ளிகள் (1.22%) குறைந்து 17,071.44 புள்ளிகளில் நிறைவடைந்தது. இதேவேளை, S&P SL20 சுட்டியும் 57.43 புள்ளிகள் குறைந்து 5,094.31 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. சந்தையின் இந்தத் தொடர்ச்சியான சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin