இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா, இஸ்ரேல்-ஈரானுக்கிடையில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், இலங்கை மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் செல்ல இருப்பவர்கள் தங்களின் பயணங்களை தாமதப்படுத்துவது நன்மை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் மற்றும் ஈரான் வான்வெளி முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அருகில் வைத்திருக்க வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin