இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பேர்லினில் உள்ள பெல்லெவூ மாளிகையில் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டைன்மியருடன் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் கவனம் செலுத்தினர், குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு, தொழிற்பயிற்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
இந்த பேச்சுவார்த்தைகள் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் பரஸ்பர விருப்பத்தை அடிக்கோடிட்டுக் காட்டின. எதிர்கால கூட்டு முயற்சிகள் குறித்து இரு ஜனாதிபதிகளும் நம்பிக்கை தெரிவித்தனர்.


