தேசிய பாடசாலை அந்தஸ்த்து ரத்து

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார காலத்தில் வழங்கப்பட்ட 671 பாடசாலைகளில் தேசிய பாடசாலை உயர்வு அந்தஸ்து இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தில் ஒரு பாடசாலைக்கு இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை அப்போது அப்போதைய அரசாங்கம் வழங்கியது.

அத்துடன், ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபாவை ஒதுக்கி பாடசாலைகளுக்கான பெயர்ப்பலகைகளை அமைப்பதற்கும் அவசரத்திருத்த வேலைகளுக்கும்
பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், மேற்கூறிய தேசிய பாடசாலை அந்தஸ்து தற்போது நீக்கப்படுவதுடன், அவை இதற்கு முதலிருந்த
மாகாண சபை பாடசாலைகளாகவே இயங்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

அன்றைய அரசின் அறிவுரைக்கமைய மேற்படி ஒவ்வொரு பாடசாலையும் தேசிய பாடசாலை பெயர்ப்பலகைக்காக 5 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது

எனவே, இப்பெயர்ப் பலகையை அகற்றுவதுடன், தேசிய
பாடசாலை பெயரில் தயாரிக்கப்பட்ட கடிதத்தலைப்பு மற்றும் பெயர் முத்திரைகளையும் அகற்றுமாறும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1,000 தேசிய பாடசாலைகளை நாட்டில் உருவாக்கும் திட்டத்திற்கிணங்க கோட்டாபய அரசாங்கம் இத்தேசிய பாடசாலை திட்டத்தை அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: admin