பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“இந்த நேரத்தில் பேருந்து கட்டணங்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. விலைச் சூத்திரம் 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மாறாக நாங்கள் செயல்படவில்லை.

எனவே, இந்த நேரத்தில் நாங்கள் கட்டணங்களைக் குறைப்போம் என்று யாரும் எதிர்பார்க்கக்கூடாது. அப்படிக் குறைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை.

ஜூலை மாதம் நடைபெறும் ஆண்டுதோறும் பேருந்து கட்டண திருத்தத்தின் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த முடியும். இந்த மாதம் பேருந்து கட்டணங்களைக் குறைப்பதற்கான சட்டப்பூர்வ சாத்தியக்கூறு இல்லை.”

எரிபொருள் விலை மட்டும் பேருந்து கட்டணங்களைப் பாதிக்கும் ஒரே காரணியல்ல என்றும், மற்ற அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

பேருந்து கட்டணங்களை மாற்றியமைக்க, டீசல் விலையை 25-30 ரூபாவால் குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், இந்த ஆண்டு மே தினக் கூட்டங்களுக்கு எந்தப் பேருந்துகளும் கோரப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin