பிரான்ஸில் 2026-ஆம் ஆண்டிற்கான வாடகை வாகனக் கட்டணங்கள் உயர்வு

பிரான்ஸில் 2026-ஆம் ஆண்டிற்கான வாடகை வாகனக் கட்டணங்கள் உயர்வு

பிரான்ஸில் வாடகை வாகனங்களுக்கான (Taxi) புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பவும், அதே வேளையில் பயணிகளுக்கு அதிக சுமை ஏற்படாதவாறும் மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டணங்கள், 1 பிப்ரவரி 2026 முதல் அமலுக்கு வருகின்றன.

அதன் முக்கிய அம்சங்கள்

1. அடிப்படைப் பயணக் கட்டணங்கள் (Base Fares)

பாரிஸ் நகரம் மட்டுமின்றி பிரான்ஸின் மாகாணங்கள் என அனைத்து இடங்களிலும், ஒரு பயணத்திற்கான குறைந்தபட்சக் கட்டணம் 8 யூரோவாக தொடர்கிறது. இருப்பினும், மற்ற முக்கியக் கூறுகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

வாகனத்தில் ஏறுவதற்கான கட்டணம் (Pick-up): அதிகபட்சமாக 4.48 யூரோ வரை இருக்கலாம் (2025-ல் 4.40 யூரோவாக இருந்தது).

தூரம் சார்ந்த கட்டணம்: ஒரு கிலோமீட்டருக்கு அதிகபட்சமாக 1.30 யூரோ வசூலிக்கப்படும்.

காத்திருப்புக் கட்டணம்: வாகனத்தின் காத்திருப்பு அல்லது மெதுவான பயணத்திற்கான கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு 42.15 யூரோவாக உயர்த்தப்பட்டுள்ளது.

2. கூடுதல் கட்டணங்கள் எப்போது பொருந்தும்?

பயணக் கட்டணத்தில் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கூடுதல் தொகை வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கும் கடுமையான வரம்புகள் உண்டு:

இரவில் பயணம் செய்யும்போதோ அல்லது பனி படர்ந்த சாலைகளில் (பனிக்கால டயர்களுடன்) பயணிக்கும்போதோ 50% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம்.

ஓட்டுநர் பயணியை இறக்கிவிட்டு வெறுமையாகத் திரும்ப வேண்டிய சூழல் இருந்தாலோ அல்லது நகர எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளுக்கோ சென்றால் 100% வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம்.

இரவு நேரக் கூடுதல் கட்டணமும், பனிக்காலக் கட்டணமும் ஒரே நேரத்தில் சேர்த்து வசூலிக்கப்படாது.

இந்தக் கட்டண மாற்றங்களை ஓட்டுநர்கள் தங்கள் மீட்டர்களில் பதிவு செய்ய இரண்டு மாத கால அவகாசம் உள்ளது.

முன்பதிவு மற்றும் கூடுதல் பயணிகளுக்கான கட்டணம்

உடனடி அழைப்பு: அவசரமாக வாகனத்தை அழைத்தால், நகரத்தைப் பொறுத்து 2 முதல் 4 யூரோ வரை கூடுதல் கட்டணம் உண்டு (உதாரணமாக: பாரிஸ் மற்றும் நீஸ் நகரில் 4 யூரோ).

முன்பதிவு (Advance Booking): முன்னரே திட்டமிட்டு வாகனத்தை முன்பதிவு செய்தால், பாரிஸில் 7 யூரோவும், லியோன் (Lyon) நகரில் 4 யூரோவும் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

பயணிகள் எண்ணிக்கை: காரில் நான்கு பேருக்கு மேல் பயணித்தால், 5-வது நபரிலிருந்து ஒவ்வொருவருக்கும் கூடுதல் கட்டணம் (பாரிஸில் 5.50 யூரோ) வசூலிக்கப்படும்.

சுமைக்கட்டணம்: பாரிஸ் அல்லாத பிற நகரங்களில் பெரிய சுமைகளுக்கு 2 யூரோ கூடுதல் கட்டணம் உண்டு.

விதிவிலக்கு: தொடருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் பயணிகளை ஏற்றுவதற்கோ அல்லது மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகளை எடுத்துச் செல்வதற்கோ எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.

4. விமான நிலையங்களுக்கான நிலையான கட்டணங்கள் (Fixed Rates)

பயணிகளின் வசதிக்காக, முக்கிய விமான நிலையங்களுக்குச் செல்ல நிலையான கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் இந்தக் கட்டணம் மாறாது.

பாரிஸ் நகரில்:

பாரிஸ் (வலது கரை) ↔️ சார்லஸ் டி கோல் (CDG) விமான நிலையம்: 56 யூரோ

பாரிஸ் (இடது கரை) ↔️ சார்லஸ் டி கோல் (CDG) விமான நிலையம்: 65 யூரோ

பாரிஸ் (வலது கரை) ↔️ ஓர்லி (Orly) விமான நிலையம்: 45 யூரோ

பாரிஸ் (இடது கரை) ↔️ ஓர்லி (Orly) விமான நிலையம்: 36 யூரோ

தெற்கு பிரான்ஸின் ‘நீஸ்’ (Nice) மற்றும் ‘துலூஸ்’ (Toulouse) போன்ற நகரங்களிலும், மண்டலங்களுக்கு ஏற்ப நிலையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin