இலங்கையில் முதலீடு செய்ய காத்திருக்கும் சிங்கப்பூர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று (27) டோக்கியோவில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமரிடம் விளக்கமளித்தார்.

அத்துடன் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

சுதந்திர தினத்தை கொண்டாட சிங்கப்பூருக்கு அழைப்பு
இதனை வரவேற்ற பிரதமர் லீ சியென் லூங் , இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதேவேளை அடுத்த வருடம் இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிங்கப்பூர் பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.

Recommended For You

About the Author: webeditor