திசைக்காட்டியின் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க ஐ.ம.ச தீர்மானம்

திசைக்காட்டி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்தார்.

2025 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. 7ஆவது நாளாக இன்று நடைபெற்று வருகின்ற வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

(25) நடைபெறும் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், குறிப்பாக வரிக் குறைப்பு, மருந்து பொருட்களின் விலைக் குறைப்பு, ஐஎம்எப் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல விடயங்களை நிறைவேற்றவில்லை எனவும், அத்துடன் அரச பணியாளர்களையும் ஏமாற்றியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய காரணங்களால் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சியான தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin