தீ விபத்தில் ஆறு மாத கர்ப்பிணியான உதவி பிரதேச செயலாளர் சதீஸ் தமிழினி உயிரிழப்பு!

தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சதீஸ் தமிழினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை படுக்கையறையில் வைக்கப்பட்ட நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியமையால், தீக்காயங்களுக்கு உள்ளான இவர், சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை இவரை காப்பாற்ற முற்பட்ட கணவரும் சிறு தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin