நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பழங்குடி மக்கள் பெரிதும் பாதிப்பு!

பிபில ரதுகல கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இன்று கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அதன் தலைவர் சுதா வன்னிலத்தோ தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி மோசமடைந்துள்ள நிலையில் தனது மக்கள் இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை உணவைக் கூட தேட முடியாத நிலை

இக்கிராமத்தில் சுமார் 110 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், இளைஞர்கள் எவருக்கும் வேலையும் இல்லை, கூலி வேலை கூட இல்லை என்றும் அதனால் ஒரு வேளை உணவைக் கூட தேட முடியாத நிலை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய உணவுப் பற்றாக்குறையால் சிறுவர்கள் பாடசாலை செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சில குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயம்

உரம் மற்றும் நிலப்பிரச்சினை காரணமாக ஆதிவாசி மக்கள் விவசாயம் செய்வதை கடுமையாக பாதித்துள்ளதால் விவசாய நிலங்கள் அனைத்தும் வறண்டு வருவதாகவும் பழங்குடியினத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor