நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் நோய்கள்: வைத்தியர்கள் எச்சரிக்கை

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் நோய்கள்: வைத்தியர்கள் எச்சரிக்கை

நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்த அவர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிலைக்கு சமூக ஊடகங்களின் பயன்பாடும் ஒரு காரணம் எனத் தெரிவித்த அவர் தற்போது இளைஞர்கள் மத்தியில் டேட்டிங் பயன்பாடுகள் பரவலாகக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், சிலர் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை நாடியுள்ளனர் என்றும், இது போன்ற காரணங்களால், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி போன்ற வைரஸ்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுகின்றன’ எனவும் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin