உலகக் கிண்ணத் தொடர் – நாளை இறுதி போட்டி

நடப்பு மகளிர் ICC U19 உலகக் கிண்ணத் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

114 ஓட்டங்களை விரட்டிய இந்திய அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. இந்திய அணியின் ஓபனர் ஜி.கமலினி 50 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் இன்னிங்ஸை ஓபன் செய்த திரிஷா கோங்கடி 29 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்தார்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 60 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அரை இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இருப்பினும் ஆயுஷி ஷுக்லா, பருணிகா சிசோடியா மற்றும் வைஷ்ணவி சர்மா என இந்திய சுழற்பந்து வீச்சு வீராங்கனைகள் இங்கிலாந்தை அப்படியே சுருட்டி விட்டனர். மூவரும் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தினர்.

16 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது இங்கிலாந்து.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா சார்பில் பருணிகா மற்றும் வைஷ்ணவி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி நாளை (02) நடைபெற உள்ள இறுதி போட்டியில் தென் ஆபிரிக்காவுடன் விளையாட உள்ளது.

Recommended For You

About the Author: admin