குற்றச்செயல்கள், குற்றவாளிகள் தொடர்பில் 1997க்கு அறிவியுங்கள்!

குற்றச்செயல்கள், குற்றவாளிகள் தொடர்பில் 1997க்கு அறிவியுங்கள்!

குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தினால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவல்கள் குற்றவாளிகளுக்கும் சட்டவிரோத செயல்களைச் செய்பவர்களுக்கும் கிடைப்பதாக மக்களுக்கு சந்தேகம் இருப்பதால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தகவல் அளிப்பவர் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவதற்காக, பொலிஸ் தலைமையகம் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin