மேஷம்
வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் விருத்தி அடைவீர்கள். அன்புடன் பேசி காதலியயை அரவணைப்பீர்கள். அவசியமான செலவுகள் செய்து அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 9 7 6 1
ரிஷபம்
எதிர்பார்த்த வங்கிக் கடனை தடையின்றி பெறுவீர்கள். அரசாங்க ஒப்பந்தங்களால் அனுகூலம் அடைவீர்கள். கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் எடுப்பீர்கள். மனைவியின் ஒற்றைத் தலைவலியை போக்க மருத்துவரை சந்திப்பீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். மலர் வணிகம் செய்பவர்கள் மகத்தான பலன் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 6 1 2 9
மிதுனம்
சகோதர உறவுகளால் சஞ்சலங்கள் அடைவீர்கள். வெளியூர் பயணங்களில் அலைச்சலால் அவதிப்படுவீர்கள். வயிற்றுக் கோளாறை சரி செய்ய மருத்துவரை நாடுவீர்கள். பண வரவுகளை பக்குவமாகக் கையாளுவீர்கள். வாகனம் களவு போய் காவல் நிலையம் செல்வீர்கள். உறவினர்களை ஒன்று சேர்க்க பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 5 9 4 3
கடகம்
உயிர்த்தொழில் என்று சொல்லக்கூடிய பயிர்த் தொழிலை சிறப்பாக செய்வீர்கள். விவசாயிகள் நல்ல லாபம் பெறுவீர்கள். தொழிற்சாலையில் உற்பத்தியை பெருக்குவீர்கள். இடையூறுகளைத் தாண்டி வெளிநாட்டில் வேலை செய்வீர்கள். புதிதாக தொழில் தொடங்குவீர்கள். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த அரசு பணியில் அமர்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 2 3 8 5
சிம்மம்
எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய மனை இடம் வாங்குவீர்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொழிலில் இறங்காதீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்துகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். காதலியிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 1 7 6
கன்னி
நம்பியவர்களால் தக்க சமயத்தில் ஏமாற்றப்படுவீர்கள். பணியிடங்களில் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக லாபம் பெற மாட்டீர்கள். ஷேர் மார்க்கெட்டில் அதிக முதலீடு செய்யாதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 5 1 2 9
துலாம்
தாராளமான பணப்புழக்கத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். உரிய மருத்துவ பரிசோதனை செய்வீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை. அதிர்ஷ்ட எண்: 6 9 4 3
விருச்சிகம்
பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை ஒவ்வொன்றாக விலக்குவீர்கள். வியாபார விருத்திக்கு பெண்களின் சேமிப்பைப் பெறுவீர்கள். தொழிலில் செய்த முதலீட்டால் பல மடங்கு லாபத்தை பெறுவீர்கள். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயர்ந்து மனநிறைவை அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம். அதிர்ஷ்ட எண்: 9 3 8 5
தனுசு
மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். மேம்போக்காக இருந்த நீங்கள் சேமிப்பில் நாட்டம் கொள்வீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வீர்கள். வேலையாட்களின் உதவி யால் வியாபாரத்தை நல்ல முறையில் நடத்துவீர்கள். நிலையான வருமானம் பெற்று நிம்மதியாக உறங்குவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு. அதிஷ்ட எண்: 3 7 6 1
மகரம்
நீங்கள் உதவி செய்தவர்களால் உபத்திரவம் அடைவீர்கள். கூட இருந்து குழி பறிக்கும் முயற்சியை முறியடிக்க சிரமப்படுவீர்கள். ஐந்தாம் படையினரை அடையாளம் காண்பீர்கள். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவீர்கள். வார்த்தைகளை அளந்து பேசுவீர்கள். நிதானமாக செயல்படுவீர்கள். சந்திராஷ்டம நாள். சங்கடங்களைச் சந்திக்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 8 1 2 9
கும்பம்
உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். அரசாங்கப் பதவியை அலங்கரிப்பீர்கள். சளி தொல்லையால் சங்கட்டப்படுவீர்கள். உரிய நேரத்தில் தொலைபேசியை எடுக்காமல் காதலியிடம் திட்டு வாங்குவீர்கள். கோயில் திருப்பணிக்கு உதவுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 8 9 4 3
மீனம்
நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தப்பாகப் புரிந்து கொள்வதால் மன வேதனைப்படுவீர்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி உடல் உபாதையில் சிக்குவீர்கள். செய்யாத குற்றத்திற்கு நீங்கள் தண்டனை பெறுவீர்கள். அகலக் கால் வைக்காதீர்கள். கடன் வாங்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 3 8 5