சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த தொடர் கடந்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டு பின்னர் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து சங்கக்கார எந்த தொழில்முறை லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை, எனவே இது முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் அவரது முதல் தொடராகும்.

இதேவேளை இந்திய அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கரும், அவுஸ்திரேலியாவின் தலைவராக ஷேன் வாட்சனும், இங்கிலாந்து அணியின் தலைவராக இயோன் மோர்கனும், மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவராக பிரையன் லாராவும், தென்னாபிரிக்கா அணியின் தலைவராக ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் மும்பை, ராய்ப்பூர் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin