அரசாங்க வைத்தியசாலையின் அம்புலன்ஸில் பெண் சுகாதார உதவியாளரை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியமை தொடர்பில் அதே அம்புலன்ஸில் கடமையாற்றியதாக கூறப்படும் சுகாதார ஊழியர் ஒருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி பிற்பகல் அரச வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் பலர் ராகம பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர் கடவட பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பது வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.