கடத்தப்பட்ட மாணவியின் தந்தை இவ்வாறு கூறுகிறார்! சந்தேக நபர் தனது மருமகன் !!!
கம்பளை, தவுலகல பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியும், கடத்திய சந்தேக நபரும் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகளினால் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேக நபரும் மாணவியும் இன்று (14) கம்பளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர்..
இதேவேளை, சிறுமியின் தந்தை பொலிஸாரிடமும் ஊடகங்களுக்கும் தெரிவிக்கையில், தனது மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் காதல் உறவு இல்லை என்று கூறினார்.
தனது மகளைக் கடத்திய சந்தேக நபர் தனது மருமகன் எனவும், எனினும் ஏனைய இருவரைப் பற்றி தனக்குத் தெரியாது எனவும் கடத்தப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.