மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தொட்டதெல்லாம் துவங்க கூடிய நாளாக இருக்கும். நல்லதே நடக்கும். லாபம் பெருகும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடந்து முடியும். பொங்கல் விழாவை சந்தோஷமாக கொண்டாடுவீர்கள். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பால் பொங்குவது போல உங்கள் குடும்பத்திலும் சந்தோஷம் பொங்கி வழியட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய அன்பு வெளிப்படும். உறவுகளோடு சொந்தபந்தங்களோடு, சேர்ந்து பொங்கலை கொண்டாடி மகிழ்வீர்கள். வேலை தொழில் என எல்லா பிரச்சனைகளும் சரியாகும். அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று மனநிம்மதியோடு பொங்கலை கொண்டாடி மகிழ்ச்சியடைவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்த உறவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து விடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை சுமை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். உடல் சோர்வு இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று இறை வழிபாடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதிற்கு பிடித்த கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் மன நிறைவோடு பொங்கல் கொண்டாடி மகிழ்வீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். இன்றைய நாள் செலவுகளும் கொஞ்சம் இரட்டிப்பு ஆகும் நாளாக இருக்கும். தைத்திருநாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் குடும்பத்தோடு சேர்ந்து பொங்கலை கொண்டாடி மகிழ்வீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். உற்சாகம் இரட்டிப்பாக மாறும். தேவையில்லாத நண்பர்களோடு அதிக நேரம் செலவு செய்யாதீங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நினைத்ததை விட வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். சின்ன சின்ன வியாபாரிகளுக்கு கூட, இன்று மன நிறைவான நாளாக அமையும். வீட்டில் பொங்கல் விழா கலை கட்டும். விருந்தாளிகளின் வருகையால் வீட்டில் இருப்பவர்களுக்கு சந்தோஷம் பெருகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை நிறைந்த நாளாக இருக்கும். பொங்கல் விழா நல்லபடியாக நடந்து முடிந்தாலும், சில பல பிரச்சனைகள் உங்களுக்கு மன குழப்பத்தை கொடுக்கும். இன்றைய தினம் வேகமாக செயல்படக்கூடாது. விவேகத்தோடு செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கும். பொங்கல் கொண்டாட்டமும் சிறப்பாக நடந்து முடியும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வியாபாரம் வேலை எல்லாம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் பெண்கள் வேலைகளை எல்லாம் சுறுசுறுப்பாக முடித்து விடுவீர்கள். உறவுகளோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். இன்றைய நாள் செலவு இரட்டிப்பாகும். இன்றைய நாள் பொங்கல் கொண்டாட்டம் கலைக்கட்டும் நாள் வாழ்த்துக்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று குறிப்பிட்ட நேரத்தில் எந்த வேலையும் செய்ய முடியாது. எல்லா வேலையிலும் கொஞ்சம் தாமதம் இருக்கும். ஆகவே அதிகாலை வேலையிலேயே சுறுசுறுப்பாக செயல்படுங்கள். அப்போதுதான் நேரத்திற்கு சாமி கும்பிட முடியும். பொங்கல் வைக்க முடியும். உறவுகளோடு நேரத்தை கழிக்க முடியும். நேரத்தை வீணடிக்காதீங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது தெளிவாக இருக்கும். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய கோபம் எல்லாம் மறைந்து போகும். பகை எல்லாம் மறைந்து போகும். இந்த தைத்திருநாள் தித்திக்கும் திருநாளாக மாறும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வருமானத்தில் பற்றாக்குறை இருந்தாலும், பொங்கலை ஜாம் ஜாம் என்று கொண்டாடி இருப்பீங்க. உறவுகளோடு ஒன்றிணைந்து சந்தோஷப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மன நிம்மதி பெறுவீர்கள்.