2025.01.12ம் திகதி தனது பணிக்காக புறப்பட்ட மொஹமட் இஸ்ஸதீன் அர்ஷாத் அஹமட் என்ற 25 வயது இளைஞன், தவுலகல பகுதியில் சபுகஹயா சந்தியில் பஸ் ஏற சென்ற போது வழமையான பஸ்ஸை கைவிட்ட இளைஞன், பஸ் நிறுத்தத்தில் இருந்த போது பள்ளிக்கு வந்த இரண்டு மாணவிகள் வேன் அருகே சென்ற போது வேனில் இருந்த ஒருவர் மாணவி ஒருவரின் கழுத்தை பிடித்து வேனில் தள்ளி ஏற்றினார்.
அந்த நேரத்தில் இந்த இளைஞன் ஓடோடி சென்று வேனுள்ளே இருந்த மாணவியை காப்பாற்ற கதவில் தொங்கியபடி போராடினார்.
இறுதியில் கடத்தல் காரர்களால் தாக்கப்பட்டு தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தார்.
மேற்படி எவ்வித எதிர்பார்ப்புமின்றி தன் உயிரை துச்சமாக மதித்து இந்த வீரதீர செயலை புரிந்த இளைஞனனின் தைரியம் தொடர்பில் பொலிஸ் தலைவணங்கி மரியாதை செய்கிறது.