140 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
291 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 29.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.