தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களை அச்சுறுத்திய இருவர் கைது- வாகனத்தை மறித்து மிரட்டியதாக குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தியின் (NPP) இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பிங்கிரிய ஆடைத் தொழிற்சாலை வளாகத்தில் வைத்து மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (30) இடம்பெற்ற இச்சம்பவத்தில், அவர்கள் பயணித்த வாகனத்தை மறித்து, அவர்களை மிரட்டியமை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் இன்றையதினம் (31) ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து குறித்த இருவருக்கும் ஜனவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.