டின் மீன் மீதான VAT வரியை குறைக்குமாறு கோரிக்கை

டின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை குறைக்குமாறு இலங்கை டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது பிரச்சினை இல்லையென்றாலும், அவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கத்தின் தலைவர் ஷிரான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

VAT வரி குறைக்கப்படாவிட்டால் அதன் விளைவை மீனவர்கள் அனுபவிக்க நேரிடும் என ஷிரான் பெர்னாண்டோ கூறுகிறார்.

இதேவேளை, அனைத்து தரப்பினருடனும் இணக்கம் காணப்பட்டதன் பின்னரே ரின் மீன்களுக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin