போலி நாணயத்தாளை பயன்படுத்தி மதுபானம் வாங்க முயன்றவர் கைது !

பாதுக்க நகரத்தில் உள்ள மதுபானசாலை ஒன்றில் 5000 ரூபா போலி நாணயத்தாளை பயன்படுத்தி மதுபானம் வாங்க முயன்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 36 வயதுடையவராவார்.
சந்தேக நபர் குறித்த மதுபானசாலைக்குச் சென்று மதுபானம் வாங்க முயன்றுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்த நாணயத்தாள் தொடர்பில் சந்தேகமடைந்த மதுபானசாலையின் உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்க தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin