அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் 2025 பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82 (ஏ) பிரிவின்படி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.