பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கானாவிலிருந்து தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.12) அதிகாலை கட்டார் எயார்வைஸ் விமானத்தில் அந்த பெண் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்தப் பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் சுமார் 4,068 கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவால் 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்