நாட்டில் அதிகரித்துள்ள குப்பைகள்

பண்டிகை காலத்தில் கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

நாளாந்தம் 450 தொன்களாக காணப்பட்ட குப்பைகள் இம்மாத இறுதிக்குள் 500 தொன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பாலித நாணயக்கார,

“பண்டிகைக் காலம் என்பதால், நமது சராசரி குப்பை உற்பத்தி ஓரளவுக்கு அதிகரித்துள்ளது.பொதுவாக, நகரில் தினசரி குப்பை உற்பத்தி 420 முதல் 450 தொன் வரை காணப்படுகிறது.

ஆனால், டிசம்பர் 31ஆம் திகதிக்குள், கொழும்பிற்கு வரும் அதிக எண்ணிக்கையிலான மக்களால், இது சுமார் 500 தொன்களாக அதிகரிக்கலாம் என நாங்கள் கணிக்கிறோம்.”

இதேவேளை, அதிகளவிலான உணவுப்பொருட்கள் தூக்கி எறியப்படுவதால், அழுகும் குப்பைகளின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin