தேசிய அடையாள அட்டை இல்லாமல் வெளியே சென்றால் கைது செய்ய முடியுமா?

தேசிய அடையாள அட்டை இல்லாமல் வெளியே சென்றால் கைது செய்ய முடியுமா?

எழுத்தாளரும் கலைஞருமான கசுன் மகேந்திர ஹீனட்டிகல, அத்துருகிரிய பொலிஸாரால் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டதாகவும், தேசிய அடையாள அட்டை தம்மிடம் இல்லாத காரணத்தினால்தான் தான் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

டிசம்பர் 20 அல்லது அதற்கு அடுத்த நாள் இரவு, அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கடைக்குச் சென்றதாகவும், சாதாரண உடையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

தன்னை விசாரித்த பொலிஸார், தன்னுடைய வீடு எங்கே என்று கேட்டதாகவும் அதன் பின்னர், தன்னிடம் தேசிய அடையாள அட்டையைக் கேட்டதாகவும், “வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு வருவதற்கு ஐடீ எதற்கு?” என்று தான் கேட்டபோது, ​​”இவளை வாகனத்தில் ஏற்று” என்று, பொலிஸ் அதிகாரியொருவர் கூறியதாகவும், பின்னர் அவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக முச்சக்கரவண்டியில் ஏற்றி, அதுருகிரிய பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், சட்டத்தரணியான கசுன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்கள் தன்னை அழைத்துச் செல்லும் போது, தன்னை இறுக்கிப் பிடித்திருந்ததால், உடல் ரீதியாகத் தான் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவத்தையடுத்து அத்துருகிரிய பொலிஸ் நிலையத்து, தனது கணவரின் அடையாள அட்டையுடன் வந்த மனைவி நடிகை மாதவி வத்சலா மற்றும் கசுன் மகேந்திரவின் சகோதரி ஆகியோரை, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு திட்டியதாக, பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கசுன் குறிப்பிட்டார்.

பிறந்து 18 நாட்களேயான தனது மகனுக்கு பாலூட்டுவதை விடுத்து, தனக்காக தனது மனைவி பொலிஸ் நிலையத்துக்கு வந்து, தனது அடையாளத்தை நிரூபித்ததாகவும் சட்டத்தரணியும் எழுத்தாளரும் கலைஞருமான கசுன் மகேந்திர தெரிவித்தார்.

ஆனால், இந்த நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், எப்போதும் அடையாள அட்டை இருக்க வேண்டுமா அல்லது உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் இருக்க வேண்டுமா என்ற பிரச்சினைகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்தச் சிக்கல் நிலை மற்றும் அதன் சட்ட நிலை குறித்து, பிபிசி சிங்களச் சேவை, மனித உரிமைகள் சட்டத்தில் நிபுணரான சட்டத்தரணி லக்ஷான் டயஸிடம் விசாரணை நடத்தியது.

அடையாளத்தை வெளிப்படுத்த முடியாத காரணத்தினால் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என வலியுறுத்திய சட்டத்தரணி லக்ஷான் டயஸ், அடையாளத்தை வெளிப்படுத்துமாறு கோர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin