சபாநாயகர்கள் வரலாற்றில் வியப்பான அனுபவங்கள்

சபாநாயகர்கள் வரலாற்றில் வியப்பான அனுபவங்கள்

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை காரணமாக கடந்த 13 ஆம் திகதி சபாநாயகர் தனது பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டது. ஆனால் சபாநாயகராக பதவி வகிக்க கலாநிதி பட்டம் அவசியமில்லை

பாராளுமன்ற தேர்தல் சட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1981 ஆம் இலக்க சட்டத்தின்படி, மக்களை தவறாக வழிநடத்தும் வகையில், பொய்யான நிலைப்பாடுகளை வழங்கி, வாக்குகளை திருடி, பாராளுமன்றம் வரும் வகையில் யாரேனும் செயல்பட்டால், பாராளுமன்ற சட்டம் மற்றும் தேர்தல் சட்டத்தின்படி, அவர்கள் செய்தது குற்றம். அந்தக் குற்றத்திற்கு தண்டனை வழங்க வேண்டும். காரணம்,

அசோக ரன்வல சபாநாயகர் வரலாற்றில் 23 ஆவது சபாநாயகராவார். எவ்வாறாயினும், பிரிட்டிஷ் பாரம்பரியத்தில் சபாநாயகர் கண்டிப்பாக பாரபட்சமற்ற நபர். சபாநாயகர் பதவியை ஏற்ற பிறகு அவர் தனது அரசியல் கட்சியுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

அசோக ரன்வல கலாநிதி பட்டம் காரணமாக ராஜினாமா செய்த முதல் சபாநாயகராக வரலாறு படைத்தாலும், பல்வேறு காரணங்களுக்காக வரலாற்றை உருவாக்கிய சபாநாயகர்கள் உள்ளனர். பிரான்சிஸ் மொலமுரே நாட்டின் முதல் சபாநாயகராக வரலாற்றைக் கொண்டிருந்தாலும், சபாநாயகராக பதவி வகித்து சிறையில் அடைக்கப்பட்ட முதல் சபாநாயகராக மொலமுரே வரலாறு படைத்துள்ளார்.

மதுவன்வெல மாவட்ட பூதல் வழக்கிலிருந்து 22,000 ரூபாவுக்கு நீதிமன்ற அனுமதி பெற்று ரூ. 52,000 பெற்றதாக மொலமுரே மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குறுகிய காலம் (22 நாட்கள்) சபாநாயகர் பதவி வகித்தவர் என்ற சாதனையும் அசோக ரன்வலவுக்கே உரியது. டி.பி. சுபசிங்கே 1960 மார்ச் 30 முதல் ஏப்ரல் 23 வரை சபாநாயகராக பதவி வகித்தார். அதாவது 24 நாட்கள்.

லேக்ஹவுஸில் இருந்து பிறந்த சபாநாயகர்;

சபாநாயகராக பதவி வகித்த லேக்ஹவுஸ் ஊழியர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் மட்டுமே. டி.ஆர். விஜயவர்தன காலத்தில் லேக்ஹவுஸ் நூலகத்திலும் விளம்பரத் துறையிலும் பணியாற்றினார். தேசிய ராஜ்யசபாவின் கடைசி சபாநாயகராக ஆனந்த திஸ்ஸ வரலாறு படைத்தார். ஆனந்த திஸ்ஸ 1977 ஓகஸ்ட் 4 முதல் 1978 செப்டம்பர் 13 வரை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தின் முதல் சபாநாயகராக பதவி வகித்தார்.

2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி அனுர பண்டாரநாயக்க சபாநாயகர் பதவிக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார், ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியில் அல்ல, ஐ.தே.க. கட்சியில். சுப்ரீம் கோர்ட் விதித்த தடை உத்தரவை ரத்து செய்ததால் வரலாறு படைத்தார். பாராளுமன்றத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சபாநாயகர் அநுர தெரிவித்திருப்பது இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பதிவாகியுள்ளது.

இந்த நாட்டின் சபாநாயகர்களின் வரலாற்றில் அதிக அழுத்தங்களுக்கு உள்ளான சபாநாயகர் கரு ஜயசூரிய. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தபோது, ​​52 நாள் அரசாங்கத்தில் அதிக அழுத்தங்களுக்கு உள்ளான பாராளுமன்ற சபாநாயகராக கரு ஜயசூரிய இருந்தார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து பல்வேறு அழுத்தங்களை அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது.. ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இறுதியில் மகிந்த ராஜபக்ஷ பிரதமர் ஆசனத்தை இழந்தார். மேலும், சபாநாயகராக பொலிஸ் பாதுகாப்புடன் வந்த முதல் சபாநாயகர் என்ற வரலாற்றையும் கரு ஜயசூரிய படைத்துள்ளார்.

சபாநாயகர் பதவி குறித்து பேசும் போது நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முகம்கொடுத்த முதல் சபாநாயகர் மஹிந்த யாப்பா. மார்ச் 2024 இல் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் 75 வாக்குகள் மட்டுமே பெறப்பட்டன. மஹிந்த யாப்பா 117 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். மேலும், சபாநாயகர் மகிந்த யாப்பாவின் காலத்தில் அதிகளவில் விவாதிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், ஜனாதிபதி பதவிக்கு நியமிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்திய முதலாவது சபாநாயகர் என்ற பெருமையையும் மஹிந்த யாப்பாவே வரலாற்றில் பதிவு செய்தார். கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கான தேர்தல் ஜூலை 20, 2022 அன்று நடைபெற்றது.

தற்போது மற்றுமொரு பாராளுமன்ற சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வஜிர லியனகே தமிழில்: வீ.ஆர்.வயலட்

Recommended For You

About the Author: admin