ஆரம்ப பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிகையில் வீழ்ச்சி!

ஆரம்பபாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது என தெரிவித்துள்ள இலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கம் பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

பல பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான வழிவகைகளை இழந்துவிட்டனர் அவர்களி;ன் வருமானம் குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ள இலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க சீறீநாத் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாடசாலை கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நகரங்களை விட கிராமங்களில் இந்த நிலை அதிகம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஆரம்பபாடசாலைகளில் இணைந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது 20மாணவர்கள் கல்விகற்ற வகுப்புகளில் தற்போது 15 மாணவர்களே கல்விபயில்கின்றனர் இதற்கு மேலாக கட்டணம் செலுத்த முடியாததால் சில மாணவர்கள் தங்கள் கற்றல் நடவடிக்கைகளை இடைநிறுத்திவிட்டனர் என அவர்தெரிவித்துள்ளார்.

ஆரம்பபாடசாலை ஆசிரியர்கள் குறிப்பிட்ட கட்டணங்களை கேட்காத போதிலும் ஆசிரியர்களை எதிர்கொள்வதற்கான தயக்கம் காரணமாக பெற்றோர் ஆரம்பபாடசாலை மாணவர்களை பாடசாலைகளிற்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளஇலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இந்த நிலை தொடர்ந்தால் இலங்கையின் கல்வி துறை பாதிப்புகளை எதிர்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor