மது அருந்திவிட்டு இ.போ.ச. பஸ்ஸினை செலுத்திய சாரதி கைது
மது அருந்திய நிலையில் இ.போ.ச பஸ் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மது போதையில் பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்துக்காக இந்த சாரதி மீது வழக்குத் தொடர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சாரதி இதற்கு முன்பும் இதே தவறைச் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடமை நேரத்தில் மது போதையில் இருந்தமை, வீதி ஒழுங்குகளை மீறியமை தொடர்பாக சாரதி மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.